குஜராத், இமாசலபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் மாநில பா.ஜ.க. எம்.பி.க்களை பிரதமர் மோடி இன்று டெல்லியில் சந்தித்து பேசினார்.
குஜராத், இமாசலபிரதேச மாநில பா.ஜ.க. எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on

பா.ஜ.க.வின் பாராளுமன்ற குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் சமீபத்தில் வெற்றி பெற்ற குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான முதல்வர்களை தேர்வு செய்தல், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, குஜராத் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த பா.ஜ.க. எம்பிக்கள் பலர் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அந்தந்த மாநில எம்.பி.க்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com