குஜராத் சென்ற பிரதமர் மோடி தாயாருடன் சந்திப்பு

தனது சொந்த ஊரான ராய்சன் கிராமத்திற்கு சென்ற பிரதமர் மோடி, சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்துப் பேசினார்.
தாயாருடன் மோடி
தாயாருடன் மோடி
Published on

அகமதாபாத்:

பிரதமர் நரேந்திர மோடி நாளை குஜராத் மாநிலத்துக்கு செல்கிறார். அங்கு சரோவர் அணையில் அமைக்கப்பட்டு உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அஞ்சலி செலுத்த உள்ளார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இரவு குஜராத் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் ஆளுநர் ஆசார்யா தேவ்ரத், முதல் மந்திரி விஜய் ரூபானி உள்பட பலர் வரவேற்றனர்.

இதற்கிடையே, குஜராத் சென்ற பிரதமர்  மோடி, தனது சொந்த ஊரான ராய்சன் கிராமத்திற்கு சென்று சகோதரர் பங்கஜ் மோடியுடன் வசித்து வரும் தனது தாயார் ஹீராபென்னை நேரில் சந்தித்துப் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com