55-வது பிறந்தநாள் - அமித்ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

55-வது பிறந்தநாளை முன்னிட்டு உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா
பிரதமர் நரேந்திர மோடியுடன் உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

புதுடெல்லி:

உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள் ளார். அதில், “மத்திய மந்திரிசபையில் உள்ள எனது சக மந்திரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். கடின உழைப்பும், அனுபவமும் கொண்ட எதையும் செய்து முடிக்கும் நபர். அரசில் முக்கிய பங்காற்றி வருகிறார். இந்தியாவை வலிமையாகவும், பாதுகாப்பாகவும் உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.

மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், ஜெய்சங்கர், ஹர்ஷ்வர்தன், ஸ்மிரிதி இரானி மற்றும் பா.ஜனதா கட்சியின் பல தலைவர்களும் அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com