பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம்

பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25, 26 அல்லது 27 ஆகிய தேதிகளில் பொதுத்தேர்தலை நடத்தலாம் என அதிபர் மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.#ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussai
பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான தேதிகளை பரிந்துரை செய்தது தேர்தல் ஆணையம்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் ஆளும் கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. மேலும் காபந்து பிரதம மந்திரிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, எதிர்க்கட்சி தலைவர் குர்ஷீத் ஷாவுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். நாளை மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தொடங்கி உள்ள தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை தேர்வு செய்துள்ளது. ஜூலை 25, 26  அல்லது 27 ஆகிய தேதிகளில் தேர்தலை நடத்தும்படி அறிவிக்குமாறு ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. #ElectionCommissionofPakistan #generalpolls #MamnoonHussain

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com