சிக்கிம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள துஷ்யந்த் கவுதம் யார்? காங்கிரஸ் ஆட்சேபனை தெரிவிப்பதன் பின்னணி..!

விடுதி வரவேற்பாளர் கொலை வழக்கில் பெயர் அடிபட்டவதற்கு ஆளுநர் பதவியா?
துஷ்யந்த் கவுதம்
துஷ்யந்த் கவுதம்
Published on: 

இந்திய ஜனாதிபதி மாளிகை நேற்று முன்தினம் ஆளுநர் நியமனத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்து வந்த அர்லேகரை முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதேபோல் சில மாநிலங்களுக்கு ஆளுநர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன் அடிப்படையில் சிக்கிம் மாநில ஆளுநராக துஷ்யந்த் கவுதம் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்திற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

யார் இந்த துஷ்யந்த் கவுதம்

68 வயதான துஷ்யந்த் கவுதம் முன்னதாக பாஜக-வின் தேசிய பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். மேலும், SC பிரிவு தலைவராகவும் இருந்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள விடுதியில் வரவேற்பாளராக இருந்த அங்கிதா பண்டாரி என்பவரின் சடலம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. அவரது கொலை குற்றச்சாட்டில் துஷ்யந்த் கவுதம் பெயர அடிபட்டது, அப்படிப்பட்டவருக்கு எப்படி கவர்னர் பதவி வழங்கப்படலாம் என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைநகரில் ஒருமணி நேரம் மவுன விரதம் போராட்டம் நடத்தப்படுமு் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

ஆட்சேபனைக்குரியது என்கிறது காங்கிரஸ்

உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியல், "ஆளுநராக நியமிக்கப்பட்டது நேரடியாக துஷ்யந்த் கவுதமை காப்பாற்றும் முயற்சியாகும். ஏனென்றால், ஆளுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், "அங்கிதா பண்டாரி கொலை வழக்கில் அவரது பெற்றோர்களால் வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்ட முக்கியப் பிரமுகரை ஆளுநராக நியமிப்பது, உத்தரகண்ட் மாநிலப் பொதுமக்களின் உணர்வுகளைக் கடுமையாகப் புண்படுத்துவதற்குச் சமமாகும்.

இதற்கிடையில், சிபிஐ விசாரணை ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை; மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சிபிஐ எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் (FIR) பதிவு செய்யவில்லை. இத்தகைய ஒருவரை ஆளுநர் பதவியில் நியமிப்பது மிகவும் ஆட்சேபனைக்குரியது" எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. விவகாரத்தில் மவுனம் ஏன்?

இதற்கிடையே பாஜக தரப்பில் "மாநில காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக, அவமான உணர்வுடனும், தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடத் தேவையில்லை. மாறாக, தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் தலைவர்கள் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவிக்கும் திக்விஜய் சிங் மற்றும் அஜய் ராய் போன்ற தலைவர்களுக்கு எதிராக அவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

லக்னோவில் புதிய கட்சித் தலைவரை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது பெண் சக நிர்வாகியைச் செருப்பால் அடிக்க முயன்றவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர்கள் பேச வேண்டும். ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் பெண் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காங்கிரஸ் எம்.பி. நீக்கப்பட்டப்பட்ட விவகாரத்தில் மவுனம் காப்பது ஏன்?" கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com