மேற்கு வங்கத்தில் உள்ள உணவகத்தில் பயங்கர தீ விபத்து- 7 பேர் உடல் கருகி பலி

இறந்தவர்களில் சிலர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் ஊழியர்கள் என கூறப்பட்டுள்ளது.
Fire accident in westbengal
Published on

மேற்கு வங்காள மாநிலம் பீபூம் மாவட்டத்தில் உள்ள தாரா பீத்தில் 4 மாடியில் ஒரு ஓட்டல் உள்ளது. தாராபீடக் கோவிலுக்கு சிராவண மற்றும் நாக பஞ்சமி மாதங்களின் கடைசி திங்கட்கிழமை என்பதால் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

பயங்கர தீ விபத்து

இதனால் ஓட்டல் முழுவதும் ஏராளமான பக்தர்கள் தங்கி இருந்தார்கள். இங்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீடீரென்று தீ பிடித்தது. தரைத்தளத்தில் உள்ள வரவேற்புப் பகுதியில் தீ பிடிக்க தொடங்கியது. பின்னர் தீ மள மளவென பரவி எரிந்தது.

தரைத்தளத்தில் இருந்த செயற்கைக் கூரைகள், பைபர் கிளாஸ் மற்றும் பிற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக, புகையும் தீயும் மேல் தளங்களுக்கு வேகமாகப் பரவின.

ஓட்டலில் தங்கி இருந்தவர்கள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் ஓட்டலைவிட்டு வெளியேற முடியவில்லை.

7 பேர் பலி

பலரும் தீ பற்றி எரிந்த ஓட்டலுக்குள் சிக்கிகொண்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் 7 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் சிலர் சுற்றுலாப் பயணிகள் என்றும் மற்றவர்கள் ஊழியர்கள் என கூறப்பட்டுள்ளது.

தீக்காயங்களாலும், தீயால் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் காரணமாகவும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

ஓட்டலில் புகை மண்டலமாக காணப்பட்டதால் போலீசார், தீயணைப்பு படையினரால் உடனடியாக சம்பவ இடத்துக்குள் நுழைய முடியவில்லை. எனினும் கதவுகளை உடைத்து உள்ளே சிக்கியவர்களை மீட்டனர்.

வெகுநேரம் போராடி தீயை அணைத்து ஓட்டலுக்குள் சிக்கியவர்களை மீட்டு ராம்பூர்ஹாட் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை தீவிரம்

தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

தீ விபத்து நடந்த ஓட்டலில் அடிப்படை தீயணைப்பு கருவிகள் மிகக் குறைவாக இருந்தன. பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஒட்டலில் இருந்த தப்பிப்பது கடினமாக இருந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com