"ஸ்வீட் பாக்ஸுக்கு காத்திருக்கிறேன்": மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ராகுல்காந்தி

ராகுல் காந்தியின் 54-ஆவது பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சர் முக ஸ்டாலின் ராகுல்காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
"ஸ்வீட் பாக்ஸுக்கு காத்திருக்கிறேன்": மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ராகுல்காந்தி
Published on

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54-ஆவது பிறந்தநாளை நாடு முழுவதும் புதன்கிழமை காங்கிரஸ் கட்சியினர் மற்றும் தலைவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ராகுல்காந்தியின் பிறந்தநாளை ஒட்டி எக்ஸ் பக்கத்தில் கோவை பரப்புரைக்கு அவர் வந்திருந்தபோது ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவை பதிவிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

அந்த வாழ்த்து பதிவை பகிர்ந்த ராகுல்காந்தி, "என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி. எனது ஸ்வீட் பாக்ஸுக்கு காத்திருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கோவையில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பொதுக்கூட்டத்துக்கு செல்லும் வழியில் காரை நிறுத்திய ராகுல் காந்தி, சாலையை கடந்து பேக்கிரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக இனிப்புகளை வாங்கினார்.

பிறகு, பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த ராகுல் காந்தி, தான் வாங்கிய இனிப்பை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com