சோனியா காந்தி செய்த பாவத்தை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - அமித் ஷா

சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும்
 Amit Shah, Sonia Gandhi
Amit Shah, Sonia Gandhi
Published on

வாஜ்பாய் நினைவு தினம்

இன்று (ஆகஸ்ட் 16) முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தினம் ஆகும். இதையொட்டி ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் அடல் பிஹாரி வஜ்பாயின் 21 அடி உயரச் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பேசிய அமித் ஷா, நேற்று 80வது சுதந்திர தின நிகழ்வின்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் வந்தே மாதரம் பாடப்படும் சோனியா காந்தி செய்த சைகை குறித்து விமர்சித்துள்ளார்.

சோனியா சைகை

சோனியா காந்தி அந்நிகழ்வில் வந்தே மாதரம் பாடப் படும்போது கையை உயர்த்தி சைகை செய்ய, அது அவர் வந்தே மாதரத்தை பாதியில் நிறுத்த சொல்வது போல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக இந்த குற்றச்சாட்டை முன்வைத்தது.

ஆனால் காங்கிரஸ் தரப்பு அளித்த விளக்கத்தில், மூத்த தலைவர் கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால் அவர் அமர்வதற்காக நாற்காலி எடுத்துச் வரச் சொல்லியே சோனியா அச்சைகையை செய்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித் ஷா சாடல்

இந்நிலையில் இன்றைய நிகழ்வில் பேசிய அமித் ஷா, "சோனியா ஜி, நாட்டின் 140 கோடி மக்களும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் செய்த இந்த பாவத்தை இந்த நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்துவது பற்றி ஒருவரால் எப்படி நினைக்க முடியும்? காங்கிரஸ் தலைவர்கள் இதற்காக வெட்கப்பட வேண்டும்." என பேசியுள்ளார்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய வந்தே மாதரம் பாடல், சுதந்திரப் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தியாகிகள் தூக்குமேடை ஏறும்போது பாடிய தாரக மந்திரம் என்றும், அந்தப் பாடலை முழுமையாகப் பாடாமல் அவமதிப்பது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்துவதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசு நிகழ்வுகளில் வந்தே மாதரம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என மத்திய அரசு நடந்து முடிந்த

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com