VIDEO: மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்வதை தடுக்க விடுதி மின்விசிறிகளில் ஸ்பிரிங் பொருத்திய பல்கலைக்கழகம்! | Gujarat

அதிகளவில் பதிவாகும் மாணவர் தற்கொலைகளை தடுக்க இதுபோன்ற ஸ்ப்ரிங் அமைப்பு பொருத்தப்பட்டது.
மின்விசிறிகளில் ஸ்பிரிங்
Published on: 
Summary

குஜராத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதிகளில் மாணவர் தற்கொலைகளை தடுக்க ஸ்பிரிங் மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் உள்ள வீர் நர்மத் பல்கலைக்கழகம், மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்கும் நோக்கில் விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங் அமைப்பை பொருத்தியுள்ளது.

இதன் புகைப்படங்கள் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே போட்டி தேர்வுகளுக்கான கோச்சிங் சென்டர்கள் நிறைந்துள்ள ராஜஸ்தானின் கோட்டா நகரில் விடுதிகளில் அதிகளவில் பதிவாகும் மாணவர் தற்கொலைகளை தடுக்க இதுபோன்ற ஸ்ப்ரிங் அமைப்பு பொருத்தப்பட்டது.

ஸ்ப்ரிங் மின்விசிறி

எடை அதிகரித்தால், ​​ஸ்ப்ரிங் விசிறியை கீழ்நோக்கி நகர்த்தி, மின்சார இணைப்பைத் துண்டிக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

சூரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் 9 விடுதிகளில் 388 விசிறிகள் உள்ளன. அவற்றில் 268 ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ளவற்றையும் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் கூறுகின்றனர்.

உண்மையான தீர்வு

இருப்பினும், மாணவர்களிடையே தற்கொலைக்கு வழிவகுக்கும் காரணங்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மின்விசிறியை மட்டும் மாற்றுவது அபத்தமானது என என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற அழுத்தம், குடும்ப எதிர்பார்ப்புகள், தொழில் வாய்ப்புகள் குறித்த கவலைகள், தேர்வில் தோல்வி மற்றும் மனநல ஆலோசனை கிடைக்காதது என மாணவர்கள் மன அழுத்தம் அதிகரிக்க பல காரணங்கள் உள்ளன.

எனவே அழுத்தத்தை குறைப்பதும் மாணவர்களுக்கு மனநல சேவைகளை வழங்குவதுமே தற்கொலைகளுக்கு உண்மையான தீர்வாக அமையும் என கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com