நாட்டின் நெருக்கடி அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது: எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி!

மோடியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்.
நாட்டின் நெருக்கடி அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது: எதிர்க்கட்சிகளை சாடிய பிரதமர் மோடி!
Published on: 

ஈரான் போரால் ஏற்படும் பாதிப்புகளை வைத்து எதிர்க்கட்சிகள் குளிர் காய்வதாக பிரதமர் மோடி சாடியுள்ளார்.

குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பில்டியில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி.,

“இன்று, ஒவ்வொரு இளைஞரும், சகோதரியும், மகளும் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இது சிலருக்குப் (எதிர்க்கட்சிகள்) பிடிக்கவில்லை.

இவர்கள் நாட்டை இக்கட்டான சூழலில் காண விரும்பும் நபர்கள்; நாடு துன்பப்படும்போது இவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.

வளைகுடாப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழலால் நாடு நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டிருக்கும் வேளையில், உரங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்திகளை பரப்புகிறார்கள்.

மோடியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கவே அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள். விவசாயிகளுக்கும் மற்ற அனைவருக்கும் நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன்: நான் உங்களுடன் உறுதுணையாக நிற்பேன் என்று ஏற்கனவே கூறியிருந்தேன்.

வளைகுடாப் பகுதியில் பதற்றம் நீடித்தாலும், உலகளவில் உரங்களின் விலை உயர்ந்ததன் சுமையை நமது விவசாயிகள் மீது விழ விடாமல் அரசு தடுத்துள்ளது.” என தெரிவித்தார்.

X