“பொறுப்புக்கூறலைக் கோரும் போராட்டங்கள் முக்கியமானவை; ஆனால் ஒட்டுண்ணி காங்கிரஸ் அவற்றை சிதைக்கிறது” - பிரதமர் மோடி பேச்சு!

கரப்பான்பூச்சி அமைப்பின் நிலைப்பாடுகளுக்கு ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்து வரும்நிலையில், பிரதமர் மோடியின் இந்த கருத்து வந்துள்ளது.
“பொறுப்புக்கூறலைக் கோரும் போராட்டங்கள் முக்கியமானவை; ஆனால் ஒட்டுண்ணி காங்கிரஸ் அவற்றை சிதைக்கிறது” - பிரதமர் மோடி பேச்சு!
Published on: 

பொறுப்புக்கூறல் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களைக் கோரும் போராட்டங்கள் ஜனநாயகத்திற்கு அவசியமானவைதான் என்றும், ஆனால் அத்தகைய போராட்டங்களை மேற்கொள்ளும் அமைப்புகளை தனது சுயநலத்திற்காக காங்கிரஸ் அழித்துவிடுவதாக பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றிய அவர்.,

“அரசின் குறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டி, அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவர முற்படும் இயக்கங்களும் ஒரு ஜனநாயகத்தில் அவசியமானவையே. ஆனால் காங்கிரஸ் இந்த இயக்கங்களையும் அழித்துவிடுகிறது. அது, வேறு யாரும் முன்னேறுவதை விரும்பாத ஒரு ஒட்டுண்ணியாக மாறிவிட்டது.

காங்கிரஸ் மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க அனுமதிப்பதில்லை. அது ஒரே ஒருவரை மட்டும் முன்னிலைப்படுத்த விரும்புகிறது, மேலும் எதிர்க்கட்சியில் உள்ள இளம் தலைவர்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதில்லை.

காங்கிரஸ் தனது தோல்வியடைந்த தயாரிப்பை அறிமுகப்படுத்துவதற்காக நாட்டின் நலன்களைப் பணயம் வைப்பதை இன்னும் எவ்வளவு காலம் தொடரும் என்று எனக்குத் தெரியவில்லை.

ஓராண்டில், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் எண்ணிக்கையை விட, தனது தலைவரை அறிமுகப்படுத்த காங்கிரஸ் மேற்கொள்ளும் தோல்வியுற்ற முயற்சிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

காங்கிரஸ் தனது வீழ்ச்சிப் பாதையில் தொடர்ந்து செல்லலாம்; அதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், தனது குடும்பத்தை தொடர் தோல்விகளிலிருந்து பாதுகாப்பதற்காக, அது நாட்டின் நற்பெயரையே சோதனைக்கு உட்படுத்துகிறது.

தங்களுக்குக் கிடைக்காத அல்லது தங்களால் சாதிக்க முடியாத ஒரு வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு, அந்த வெற்றிக்கோ அல்லது சாதனைக்கோ காரணமான ஒட்டுமொத்த அமைப்பையே அழிக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது.” என விமர்சித்து பேசினார்.

இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக்கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், கரப்பான்பூச்சி கட்சி அமைப்பும் போராட்டங்களை முன்னெடுத்து வரும்நிலையில் பிரதமர் மோடியின் இந்த கருத்து வந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com