அமித் ஷா பதில் அளிக்கும்போது அச்சப்படவோ, அவையில் இருந்து வெளியேறவோ வேண்டாம்: எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரஜிஜு வேண்டுகோள்

மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் அமித் ஷா விளக்கம் அளிப்பார் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
அமித் ஷா- கிரண் ரிஜிஜு
அமித் ஷா- கிரண் ரிஜிஜு
Published on

நீட் வினாத்தாள் முறைகேடு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் ஆதரவு தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ந்தேதி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் வகையில் பேரணி மேற்கொண்டனர். அப்போது அவர்கள் காவல்துறையின் தடுப்புகளை மீறி நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றதால் மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார்- மாணவர்களுக்கு இடையிலான மோதல் காரணமாக தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் போலீசார் காயம் அடைந்தனர்.

மாணவர்களுக்கு எதிராக போலீசார் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது தொடர்பாக இரு அவைகளிலும் குரல் எழுப்பினர்.

இந்த நிலையில்தான் கிரண் ரிஜிஜி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிப்பார் என கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

இது தொடர்பாக கிரண் ரிஜிஜு கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியினருக்கும், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருக்கும் நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன். மத்திய உள்துறை அமைச்சர் தனது பதிலை நாடாளுமன்றத்தில் வழங்கும்போது, தயவுசெய்து அச்சப்பட வேண்டாம். அவையிலிருந்து வெளியேறவோ வேண்டாம் என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வது

ஜனநாயகத்தின் அடிப்படை வலிமை என்பது கருத்து வேறுபாடுகளை நேருக்கு நேர் எதிர்கொள்வதில்தான் உள்ளது. ஆளும் தரப்பு பேசும்போது எதிர்க்கட்சியும் அதைக் கேட்டு, அதில் உள்ள உண்மைகள் என்ன, தவறுகள் என்ன, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அம்சங்கள் என்ன என்பதை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால், அதற்குப் பின்னர் வலுவான கேள்விகளையும் ஆதாரங்களையும் முன்வைத்து அரசை பொறுப்புக்கூறச் செய்ய வேண்டும்.

நாடாளுமன்றம் என்பது வெறும் கோஷங்களை எழுப்புவதற்கான இடம் அல்ல. மக்களின் பிரச்சினைகளை விவாதித்து, அரசின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, உண்மையை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய மிக முக்கியமான ஜனநாயக அமைப்பு. எனவே, உள்துறை அமைச்சர் அளிக்கும் பதிலை முழுமையாகக் கேட்பது எதிர்க்கட்சியின் ஜனநாயகப் பொறுப்பாகும்.

விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது

கருத்து வேறுபாடு இருந்தால் அதைக் குரல் கொடுத்து வெளிப்படுத்துங்கள். தவறான தகவல் இருந்தால் உண்மையான தகவல்களுடன் மறுத்துப் பேசுங்கள். அரசின் பதில் போதுமானதாக இல்லை என்றால், அதற்கான விளக்கத்தை கேளுங்கள். ஆனால் விவாதத்தைத் தவிர்ப்பது மக்களுக்கு சரியான செய்தியை அளிக்காது.

எனவே, காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் தைரியமாக இருந்து, உள்துறை அமைச்சரின் பதிலை நேரில் எதிர்கொண்டு, ஜனநாயக ரீதியாக தங்களது கருத்துகளையும் கேள்விகளையும் வலுவாக முன்வைக்க வேண்டும் என்பதே எனது அன்பான வேண்டுகோள்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com