உலக அமைதிக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்- போலந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை

உலகின் தற்போதைய நிச்சயமற்ற அரசியல் சூழலில் இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பு நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாகப் பாராட்டினார்.
PM Modi-Donald Tusk
Published on: 
Summary

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்குடன் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தினார்.

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க்குடன் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் தெளிவுபடுத்தினார். உக்ரைன் நெருக்கடி மற்றும் மேற்கு ஆசியப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலை முடிவுக்குக் கொண்டுவர மேற்கொள்ளப்படும் அனைத்து ஆக்கப்பூர்வமான மற்றும் அர்த்தமுள்ள முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து முழுமையான ஆதரவளிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் அணுசக்தி போன்ற அதிநவீன துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, பாதுகாப்புத் தளவாடங்களை இணைந்து மேம்படுத்துதல் மற்றும் கூட்டாகத் தயாரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு போலந்து நிறுவனங்களுக்குப் பிரதமர் மோடி பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே வரவிருக்கும் தடையற்ற வணிக ஒப்பந்தம் இருதரப்பு பொருளாதார வளர்ச்சிக்கும், வர்த்தகப் பெருக்கத்திற்கும் புதிய கதவுகளைத் திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போலந்து பிரதமர் பெருமிதம்

இந்தியாவுக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக வந்துள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், பிரதமர் மோடியை தனது நண்பராகப் குறிப்பிடுவதில் பெருமிதம் கொள்வதாகக் தெரிவித்தார். இந்தியாவுக்கும் போலந்துக்கும் இடையே எந்தவிதமான நலனுக்கான முரண்பாடுகளோ அல்லது பிளவுபடுத்தும் வரலாற்றுச் சிக்கல்களோ கிடையாது என்று குறிப்பிட்ட அவர், உலகின் தற்போதைய நிச்சயமற்ற அரசியல் சூழலில் இந்தியாவின் உலகளாவிய பங்களிப்பு நம்பிக்கை ஒளியாகத் திகழ்வதாகப் பாராட்டினார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட 'வியூகக் கூட்டாண்மை' ஒப்பந்தத்தின் அடிப்படையில், தற்போதைய இந்த உயர்மட்டப் பயணம் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com