

இந்தியாவில் கிராமப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதன் அறிகுறி மட்டுமல்ல; குடும்பங்களின் பொருளாதார நெருக்கடியையும் பிரதிபலிப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது.
2017-18 மற்றும் 2023-24-க்கு இடைப்பட்ட ஆண்டில் கிராமப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது, ஆனால் இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் ஊதியம் பெறாத குடும்பப் பணிகள் மற்றும் விவசாய வேலைவாய்ப்பே ஆகும் என்று அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வின் படி , கிராமப்புறப் பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 2017-18ல் 24.6% ஆக இருந்து, 2023-24ல் 47.6% ஆக கிட்டத்தட்ட இருமடங்காகியுள்ளது. இது உலகிலேயே மிகத் தீவிரமான அதிகரிப்புகளில் ஒன்றாகும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
குறிப்பாக பணிபுரியும் பெண்களில் 59% பேர் குடும்பத் தொழில்களில் ஊதியம் பெறாத உதவியாளர்களாக இருப்பதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை உயர்வுக்கேற்ப பெண்கள் பணியமர்த்தப்படுவதற்கு பதிலாக அதிகமான பெண்கள் சுயதொழில் செய்பவர்களாக இருப்பதாக ஆய்வு கண்டறிந்துள்ளது. சுயதொழில் என்ற பிரிவில், கடை நடத்துவது முதல் குடும்பமாக நடத்தும் கடைகளில் ஊதியம் பெறாமல் வேலை செய்வது வரை அனைத்தும் அடங்கும்.
ஆய்வின் தகவலின் படி சம்பளப் பணிகளில் பணிபுரியும் பெண்களின் பங்கு 11%-இலிருந்து 8%-ஆகவும், அதே நேரத்தில் தற்காலிகப் பணிகளில் ஈடுபடுவோரின் பங்கு 32%-இலிருந்து 20%-ஆகவும் குறைந்துள்ளது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பெண்கள் வேலைக்கு செல்கின்றனர்.வழக்கமாக ஊதியம், ஒப்பந்தம் ஆகியவற்றுடன் கூறிய வேலைகளில் இருந்து வெளியேறி , ஊதியம் பெறாத அல்லது நிச்சயத்தன்மையற்ற சுயதொழில் பொறுப்புகளில் நுழைந்துள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.
குறிப்பாக கிரமாப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின் கீழ், மொத்த வேலை நாட்களில் 54% பெண்களுக்கு வழங்கப்பட்டது; தற்போது அச்சட்டம் விபிஜி ராம்-ஜி சட்டத்தால் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறன திட்டங்களும் தற்போது கவலைக்குரிய ஒன்றாக மாறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த புதிய மாற்றத்திட்டம் குறிப்பிட்ட பருவ காலங்களுக்கு ஏற்ப வேலையை பங்கீடு செய்கிறது.நிதி நெருக்கடியில் உள்ள பல மாநிலங்கள் உட்பட, ஊதியச் செலவில் 40 சதவீதத்தை மாநிலங்கள் மீது சுமத்துகிறது என்று ஆய்வு கூறிப்பிட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பு இந்த புதிய ஆய்வறிக்கை கவலை தெரிவித்துள்ளது.வேலை செய்யும் கிராமப்புற பெண்களில் கணிசமானோர் தங்களது குடும்பத் தொழில்களிலோ அல்லது விவசாய நிலங்களிலோ ஊதியமில்லாத உதவியாளர்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சுயதொழில் மற்றும் தினக்கூலி வேலைகளில் ஆண்களின் வருமானத்தோடு ஒப்பிடுகையில் பெண்கள் 36% முதல் 69% வரை மட்டுமே வருவாய் ஈட்டுவதாகும் குறிப்பிட்டுள்ளது.