ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், செழிப்புடன் ஒளிரச்செய்யட்டும்: பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து

தீபாவளி என்பது இந்தியாவின் வளமான பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும், ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம்.
pm modi
Published on: 
Summary

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அனைத்துக் கட்சி தலைவர்களும் தீபாவளி பண்டிக்கைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:

அன்புள்ள சக குடிமக்களே, தீபாவளி எனும் இந்த மங்களகரமான நல் வாய்ப்பில் எனது அன்பான வாழ்த்துக்கள்.

இந்தப் பண்டிகை இருளை வென்ற ஒளியின், தீமையை வென்ற நன்மையின், மற்றும் விரக்தியை வென்ற நம்பிக்கையின் வெற்றியை குறிக்கும் சிறப்பான திருநாளாகும்.

தீபாவளி என்பது இந்தியாவின் வளமான பாரம்பரியங்களைப் போற்றுவதற்கும், ஒற்றுமையின் பிணைப்புகளை வலுப்படுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பம்.

தீபாவளி ஒவ்வொரு வீட்டையும் மகிழ்ச்சி, நல்லிணக்கம் மற்றும் செழிப்புடன் ஒளிரச் செய்யட்டும். இந்தப் பண்டிகை காலம், கருணையைப் பரப்பவும், நேர்மறை எண்ணங்களைத் தழுவவும், மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி உழைக்கவும் நம்மை ஊக்குவிக்கட்டும்.

வளமான மற்றும் ‘விக்ஷித் பாரத்’தை உருவாக்க, அனைவரும் புது ஆற்றலுடனும் உறுதியுடனும் முன்னேற வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

X