

வங்கக்கடலில் உருவான முரசு புயல், ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே இன்று (அக்டோபர் 3) அதிகாலை கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவான முரசு புயல் நேற்று தீவிர புயலாக வலுப்பெற்றது. சென்னைக்கு அருகாமையில் நேற்று புயல் நெருங்கியதால் பல இடங்களில் பரவலாக மழை பெய்தன.
தொடர்ந்து புயலானது நேற்று நள்ளிரவில் ஆந்திர மாநிலம் நோக்கி நகர்ந்து. வானிலை ஆய்வு மையத்தின்படி, அதிகாலை 1 மணியளவில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது.
இதனால், மணிக்கு 110 கி.மீ. வரை வேகமும், 120 கி.மீ. வரை திடீர் வேகமும் கொண்ட சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
தீவிர புயலாக மாறிய முரசு புயல் ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் நரசபூர் இடையே ஒங்கோலுக்கு அருகில் மணிக்கு 100 முதல் 110 வேகத்தில் அதிகாலை 3.30 மணியில் இருந்து 5 மணிக்குள் கரையை கடந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஓங்கோல் உள்ளிட்ட தெற்கு ஆந்திரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் நள்ளிரவில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது.