இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வேண்டும் - மம்தா பானர்ஜி!

பாஜகவை திருப்திப்படுத்துவது ஒன்றையே தனது வேலையாக வைத்திருந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர்.
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்ய வேண்டும் - மம்தா பானர்ஜி!
Published on

தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகளிடையே மோதல் வெடித்துள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், பாஜகவை திருப்திப்படுத்துவது ஒன்றையே தனது வேலையாக வைத்திருந்தார் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் வெடித்துள்ள சர்ச்சை என்ன?

தேர்தல் ஆணையத்தில் எடுக்கப்பட்ட சில முடிவுகளுக்கு மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் 14 முறை எழுத்துப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்ததாக வெளியான ஊடக அறிக்கையைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விளக்கம்

மறுபுறம், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான அனைத்து முடிவுகளும் மூன்று ஆணையர்களின் ஒப்புதலுடன், ஒருமனதாகவே எடுக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

மேலும் எந்தவொரு அமைப்பிலும் இறுதி முடிவு எடுப்பதற்கு முன் மாறுபட்ட கருத்துகள் எழுவது இயல்பான ஒன்று என்றும் விளக்கம் அளித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com