பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம் - ராகுல் காந்தி தாக்கு!

வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம் - ராகுல் காந்தி தாக்கு!
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையருக்கும், பிற இரு ஆணையர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக, தேர்தல் ஆணையம், ஆர்எஸ்எஸ் இணைந்து நாட்டிற்கு துரோகம் செய்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு அப்போதே எதிர்க்கட்சிகளிடம் இருந்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள இந்த விவகாரத்தால் ராகுல் காந்தியின் இந்த தாக்குதல் வந்துள்ளது.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி.,

“வாக்குத் திருட்டு என்பது இந்திய மக்களுக்கு எதிரான ஒரு குற்றம்; அது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியவை சேர்ந்து இந்த தேசத்துரோகச் செயலை செய்துள்ளன.

நீதி நிலைநாட்டப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் என்ன மோதல்?

தனியார் ஊடகம் ஒன்றின் புலனாய்வு அறிக்கையின்படி, “கடந்த 10 மாதங்களில் தேர்தல் ஆணையத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்டதாகக் கூனப்படுகிறது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் அத்துறை செயலாளருக்கு இதுதொடர்பாக குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக எதிர்ப்புத் தெரிவித்து இருவரும் எழுதிய கடிதங்கள் மூலமாக இவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட முக்கியப் பணிகளில் ஒன்று எஸ்.ஐ.ஆர்-இல் மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களும் அடங்கும்.

இந்த பரபரப்பு தகவல் வெளியானதைத் தொடர்ந்துதான் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் வந்துள்ளன. ஏற்கனவே ஞானேஷ்குமார் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com