மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு திட்டம்

4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா
Published on: 
Summary

இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என தகவல் கிடைத்துள்ளது

இம்மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவையை மாற்றியமைக்க பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக நவராத்திரியையொட்டி சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டவும் பிரதமர் மோடி திட்டமிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

மந்திய அமைச்சரவையில் அதிகபட்சம் 81 பேர் இடம் பெறமுடியும். தற்போது 68 பேர்மட்டுமே உள்ளார்கள்.

என்ன காரணம்?

2014இல் முதல் முதலில் மோடி பிரதமரானது முதல் தற்போது வரை அவர் அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டதில்லை.

ஆனால் அண்மை காலமாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் சூழலில் அதை பாஜக தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஜூன் - ஜூலையில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் வெடித்த இளைஞர் போராட்டத்தால் மத்திய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் அழுத்தத்தின் மத்தியில் தாமாக விலகினார்.

தற்போது எஸ்ஐஆர் மற்றும் தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது.

இந்த அசாதாரண சூழல்களால் பாஜக தடுமாற்றம் கொண்டுள்ள சூழலில் மூத்த தலைவர்களுக்கு பதில் புது முகங்களை முன்னிறுத்தி இளைஞர்களை கவர தீவிர முயற்சி நடந்து வருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோருக்கு எம்பி சீட் மறுக்கப்பட்டு புது முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது இதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம்

ஏற்கனவே கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போதே அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நிகழவில்லை. ஆனால் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு அமைச்சரவை மாற்றத்திற்கு பிரதமர் மோடி ஒருமனதாக தயாராகி உள்ளதாக உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

அக்டோபர் 25க்குப் பிறகு இந்த மாற்றம் நடக்கலாம் என கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆகவே இந்த மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனோடு மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com