அருணாச்சல பிரதேசத்தில் தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

பெண் ஒருவரும், அவரது 2 மகன்கள், ஒரு மகள் இறந்தனர்.
FIre accident
Published on: 

அருணாச்சல பிரதேச மாநிலம் குருங்குமே மாவட்டத்தில் பார்சிலோ பார்லோ நகரில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அருகே உள்ள வீடுகளுக்கும் மளமள என்று தீ பரவியது.

4 பேர் பலி

இந்த பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலியானார்கள். பெண் ஒருவரும், அவரது 2 மகன்கள், ஒரு மகள் இறந்தனர். அவரது கணவரை காணவில்லை. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

24 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. 19 வீடுகள் முழுமையாக சாம்பலானது. 5 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன.

தீயணைப்பு நிலையம் இல்லை

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. முதல் கட்ட தகவல்படி சமையல் அறையில் இருந்து தீ ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பார்சி பார்லோவில் தீயணைப்பு நிலையம் இல்லை என்றும், சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே தீயணைப்பு வண்டிகள் வந்ததாகவும், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மாவட்ட பேரிடர் குழு துணை ஆணையர் சீச்சுங் கூறும் போது,"இந்த தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம். மதிப்பீட்டுக்கு பிறகே சேதத்தின் அளவை கண்டறிய முடியும்" என்றார்.

மாவட்ட தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் குழு சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டது.

X