

பிரதமர் மோடியின் 25 ஆண்டு கால அரசியல் பயணத்தை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக திருப்பதியில் உள்ள எஸ்.வி.தாரகராம மைதானத்தில் 75 அடி உயர பிரமாண்ட கட் அவுட் நிறுவப்பட்டது.
மேலும் மாதங்கி தீராதிபதி பூஜ்ஜிய நந்தகிரி சாமி தலைமையில் ஆயிரம் வேத அறிஞர்கள் சிறப்பு பூஜைகள் செய்து 75 மணி நேரம் வேத மந்திரங்களை ஓதினர்.
இந்த நிகழ்வு உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் சுரேஷ், மாவட்டத் தலைவர் சமஞ்சி ஸ்ரீனிவாஸ், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் முன்னாள் தலைவர் கோலா ஆனந்த் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.