

2026ஆம் ஆண்டு ஜீலை 31ம் தேதிக்கு முந்தைய ஓராண்டுக்குள் மட்டும் குஜராத்தில் நோய்கள் காரணமாக 62 சிங்கங்கள், பெண் சிங்கங்கள் மற்றும் குட்டிகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியா, இரத்தசோகை, சிறுநீரக மற்றும் கல்லீரல் செயலிழப்பு, பல உறுப்பு செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் பிற நோய்கள் ஆகியவை சிங்கங்களின் உயிரிழப்புக்கு காரணங்களாக இருக்கலாம் என அரசு பட்டியலிட்டுள்ளது. இதிலும் குட்டிகளே அதிகமாக உயிரிழந்துள்ளன.
இந்த இறப்புகளில் குட்டிகளே அதிகபட்சமாக 28 சதவீதம் மரணமடைந்துள்ளன. இது மொத்த இறப்புகளில் 45.2% ஆகும். 17 ஆண் சிங்கங்களும் ,17 பெண் சிங்கங்களும் இறந்துள்ள. இது மொத்த இறப்புகளில் 27.4% ஆகும். மேலும் வயது வந்த சிங்கங்களின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது.
இந்த தரவுகளை எச்சரிக்கையுடன் ஆராய வேண்டும் எனவும், அரசின் பதிவில் வயது வாரியான இறப்பு விகிதங்கள் அல்லது முந்தைய ஆண்டுகளில் ஒப்பீட்டுப் புள்ளிவிவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அம்மாநில எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.