

ஆசிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காட்டில் மட்டுமே சுதந்திரமான இயற்கைச் சூழலில் வசித்து வருகின்றன. தற்போது இந்த கிர் காட்டில் உள்ள சிங்கங்களுக்கு மர்மமான வைரஸ் மூலமாக அச்சுறுத்தல் ஏறு்பட்டுள்ளது. சில வாரங்களில் 7 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. இதன் காரணமாக 17 சிங்கங்கள் தனிமைப்படுத்தப்படடு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
சிங்கங்கள் உயிரிழந்தது காரணமாக நூற்றுக்கணக்கான வனத்துறை அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். அவசர ஆய்வு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்க சிங்கத்தின் உறவாக கருதப்படும் ஆசியச் சிங்கம், ஒரு காலத்தில் ஆசியாவின் பரந்த நிலப்பரப்பு முழுவதும் சுற்றித் திரிந்தது. இன்று 700-க்கும் குறைவான சிங்கங்களே எஞ்சியுள்ளன. அவை அனைத்தும் குஜராத்தில் உள்ள கிர் காடுகளின் எல்லைகளுக்குள்ளேயே வாழ்கின்றன. இதனால், இப்பகுதியில் ஏதேனும் நோய் பரவல் ஏற்பட்டால், அது அந்த இனத்திற்கே ஒரு பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது.
முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர் டாக்டர் ஜெய்பால் சிங் கூற்றுப்படி, உயிரிழந்த சிங்கங்கள் ஒரு தொற்று வைரஸ் நோயின் அறிகுறிகளைக் கொண்டிருந்தன.
முதற்கட்டமான 'கனைன் டிஸ்டெம்பர் வைரஸ்' (Canine Distemper Virus) என்ற வைரஸ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ், பெரிய பூனை இனங்கள் உள்பட பல்வேறு வகையான விலங்குகளைப் பாதிக்கக்கூடியதாகும்.
கடந்த காலங்களில் ஆப்பிரிக்காவில் உள்ள சிங்கம் மற்றும் சிறுத்தைகளை இந்த கொடிய வைரஸ் மிகப்பெரிய அளவில் அழித்துள்ளது.
சிங்கங்களின் உயிரிழப்புக்கு 'பாபேசியா' (Babesia) என்ற ஒட்டுண்ணியும் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது சிவப்பணுக்களைத் தாக்கி, கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடிய ஒரு ஒட்டுண்ணியாகும்.
இருந்தபோதிலும் உயிரிழப்பிற்கான முக்கிய காரணம் தெரியவில்லை. ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கான எடுக்கப்பட்டுள்ளது. முடிவு வர ஒரு வாரம் ஆகும். அதற்கு பின்புதான் சரியான காரணம் தெரிய வரும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை காரணமாக 17 சிங்கங்கள் தனிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 7-ல் வரைசால் பாதிக்கப்பட்டுள்ளது.