SIR-ல் தங்களுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட முடிவுகள்: தேர்தல் ஆணையர்கள் அதிருப்தி என பரபரப்பு தகவல்..!

10 மாதங்களில் குறைந்தது 14 முறை ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
election commissioner
Published on

SIR திருத்தம்

இந்தியா முழுவதும் SIR எனப்புடும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 10 மாநிலங்கள் உட்பட் 2 யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டது.

குறிப்பாக போலி பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்காக சிறப்பு தீவிர திருத்தம் நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்திருந்தார். இந்த திருத்தம் முதற்கட்டம், இரண்டாம் கட்ட முறையில் மேற்கொள்ளப்பட்டது

தேர்தல் ஆணையர்களின் புகார்

இந்த நிலையில், SIR எனப்படும் வாக்களர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அதிருப்தி கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 மாதங்களில் தங்களுக்கு் தெரியாமல் எடுக்கப்பட்ட சில முடிவுகளுக்கு எதிராக 14 முறை தங்களது ஆட்சேபனைகளைப் பதிவு செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல்

நாடு முழுவதும் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்களார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் படி இதுவரை 3 கோடிக்கும் அதிகமான வாக்களார்கள் பெயர்கள் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்திற்குள் நடைபெறும் இந்த மோதல், அதிருப்தி கருத்துகள் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்திகான காரணம்

சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஆட்சேபனத்திற்கான காரணங்களாக , புதிய வாக்காளார்களைச் சேர்பதற்கான படிவம் 6 ல் வாக்காளர் அல்லது அவரது பெற்றோர் அல்லது பாட்டி கடந்த 'SIR' வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனரா என்ற கேள்வி புதிதாக இணைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த விதிகளை திருத்தாமல் இத்தகைய மாற்றங்களைச் செய்வது சட்டவிரோதமானது மற்றும் அங்கீகரிக்கப்படாதது என இரு ஆணையர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.இருப்பினும் இந்த முறை தேர்தல் ஆணையத்தால் அமல்படுத்தப்பட்டது.

மேலும் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் அதிகாரம் சட்டப்படி அந்தந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் இந்ததிருத்தம் மூலம் டெல்லியில் உள்ள IT பிரிவு மூலம் இத்தரவுகள் செயல்படுத்தப்படுவதாகவும் இதனால் தேர்தல் பதிவு அதிகாரியின் செயல்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்திருத்தனர்.

ஆணையத்தின் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் தொடர்பாக கவலை தெரிவித்து இரு ஆணையர்களும், நாட்டின் தலைமை செயலாளரான கேபினட் செயலாளருக்கு தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 324 மற்றும் 2023-ஆம் ஆண்டின் தேர்தல் ஆணையச் சட்டப் படி, ஆணையத்தின் அனைத்து முடிவுகளும் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ மட்டுமே எடுக்கப்பட வேண்டும் . இந்த நிலையில் தேர்தல் அதிகாரி இந்த விதிகளை மீறி செயல்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com