நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல்

பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடுகிறார்.
ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Published on

புதுடெல்லி:

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் மட்டுமின்றி இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நாளை கலந்துரையாடுகிறார். 

இதுதொடர்பாக ராகுல் காந்தி டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடன் இன்று காலை 9 மணிக்கு கலந்துரையாட உள்ளேன். இந்நிகழ்ச்சியை எனது யூ டியூப்பில் காணலாம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com