டோனியின் 38-வது பிறந்தநாள் கொண்டாட்டம் - வீரர்கள் வாழ்த்து

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனிக்கு இந்திய அணியின் வீரர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறினார்.
எம்எஸ் டோனி மற்றும் அவரது மனைவி, குழந்தை
எம்எஸ் டோனி மற்றும் அவரது மனைவி, குழந்தை
Published on

இந்திய கிரிக்கெட்டின் சகாப்தமான டோனி தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

உலக கோப்பையில் விளையாடி வரும் டோனி லீட்ஸ் நகரில் மனைவி சாக்ஷி, மகள் ஸிவா மற்றும் சக வீரர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். ஹர்திக் பாண்டியா, கேதர்ஜாதவ் உள்ளிட்ட வீரர்கள் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அவருக்கு முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். விராட்கோலி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

டோனிக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள். நம்பிக்கை மற்றும் மரியாதையின் அர்த்தங்களை ஒருசிலர் மட்டுமே புரிந்து கொள்கிறார்கள். பல வருடங்களாக டோனியுடன் நட்பில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி. எங்கள் அனைவருக்குமே அவர் மிகப்பெரிய சகோதரர். நான் ஏற்கனவே கூறியது போல டோனி எனக்கு எப்போதுமே கேப்டன் ஆவார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com