பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிடலாமா? - சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமிஷன் அறிக்கை தாக்கல்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் இதுதொடர்பான அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. #SupremeCourt #modi
பி.எம். நரேந்திர மோடி படத்தை வெளியிடலாமா? - சுப்ரீம் கோட்டில் தேர்தல் கமிஷன் அறிக்கை தாக்கல்
Published on

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடியின் இளமைக்கால வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று அவர் பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் இடம் பெறும் வகையில் ‘பி.எம். நரேந்திர மோடி’ என்ற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மோடியின் கதாபாத்திரத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தலையொட்டி ‘பி.எம். நரேந்திர மோடி’ படம் வெளியாக தேர்தல் ஆணையம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் முடியும் வரையில் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனை எதிர்த்து தயாரிப்பாளர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தில் அரசியல் பிரசாரம் கிடையாது, உத்வேகம் அளிக்கும் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தை தேர்தல் ஆணையத்திற்கு திரையிட தயாரிப்பாளருக்கு உத்தரவிட்டது. படத்தை பார்த்த பின்னர் அதனை திரையிடலாமா? வேண்டாமா? என்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட விசாரணை ஏப்ரல் 22-ம் தேதி நடைபெறும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் கமிஷன் தனது கருத்தை சீலிட்ட உறையில் அறிக்கையாக வைத்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. #SupremeCourt #modi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com