3 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா ஸ்கூட்டர் எம்.எல்.ஏ.க்கள் வழங்கினார்கள்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ஸ்கூட்டர்களை எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ஸ்கூட்டர்களை எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய காட்சி.
மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு ஸ்கூட்டர்களை எம்.எல்.ஏ.க்கள் வழங்கிய காட்சி.
Published on

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு, கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.63 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா ஸ்கூட்டர் வழங்கும் விழா ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நடந்தது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு ரூ.1 லட்சத்து 89 ஆயிரம் மதிப்பிலான 3 ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்கள்.

இதில் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கேசவமூர்த்தி, ஜெகதீஷ், தங்கமுத்து, ராமசாமி, மாணவர் அணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com