க.அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் - மு.க.ஸ்டாலின்

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். #DMK #KAnbazhagan #MKStalin #ApolloHospital
க.அன்பழகன் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் - மு.க.ஸ்டாலின்
Published on

தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் (வயது 96), வயது முதிர்வு காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அந்த விழாவிலும் அவரால் முழுமையாக இருக்க முடியவில்லை.

இந்தநிலையில், மாலை க.அன்பழகனுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சளித்தொல்லையால் மூச்சுவிட சிரமப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். குழாய் மூலம் சளி வெளியே எடுக்கப்பட்டது. தொடர்ந்து, அவருக்கு டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஆஸ்பத்திரியில் க.அன்பழகன் அனுமதிக்கப்பட்ட தகவலை கேள்விப் பட்டதும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று உடல்நலம் குறித்து விசாரித்தார். இதேபோல், தி.மு.க. பொருளாளர் துரைமுருகனும், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.யும் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்பழகனின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த பின் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியார்களிடம் கூறியதாவது:

X

Maalai Malar
www.maalaimalar.com