18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.
திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்
Published on

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் திண்டுக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றிவாய்ப்பு எப்படி இருக்கிறது?

பதில்:- விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.

கேள்வி:- தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெறுவதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே?

பதில்:- சீன அதிபரை தமிழகத்துக்கு வரவழைத்து பேசுவதற்காக பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அதில் இருந்து அவரும் எங்களுடன் தான் இருக்கிறார் என்று தெரிகிறது.

கேள்வி:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் தான் காரணம் என்று புகழேந்தி கூறியிருக்கிறாரே?

பதில்:- 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதற்கு டி.டி.வி.தினகரன் மட்டும் அல்ல, மு.க.ஸ்டாலினும் காரணம் தான். அவர் முதல்-அமைச்சராக வேண்டும், டி.டி.வி.தினகரன் துணை முதல்-அமைச்சராக வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு, 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com