அமைச்சர் கந்தசாமி
அமைச்சர் கந்தசாமி

மத்திய அமைச்சருடன் அமைச்சர் கந்தசாமி ஆலோசனை

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடன் அமைச்சர் கந்தசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
Published on

புதுச்சேரி:

மத்திய குடிமைப்பொருள் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச உணவுத்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் புதுவை அமைச்சர் கந்தசாமி பங்கேற்றார். அவருடன் துறை செயலர் ஆலிஸ்வாஸ், சிறப்பு செயலர் வல்லவன் ஆகியோர் உடனிருந்தனர். அப்போது பிரதம மந்திரி கிரிஷ் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் நோக்கம், அத்திட்டம் மூலம் அரிசி, பருப்பு, தானிய வகைகளை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com