பா.ஜனதாவின் வெற்றி ரகசியம்: பூத் லெவல் தொண்டர்களை சந்தியுங்கள் தெரியும்- கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில்

டெல்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜனதா எப்படி வெற்றி பெற்றது என்று தெரிய விரும்பினால், எங்கள் கட்சியின் பூத்தில் வேலை செய்த தொண்டர்களை சென்று சந்தியுங்கள் என்று கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார்.
பா.ஜனதாவின் வெற்றி ரகசியம்: பூத் லெவல் தொண்டர்களை சந்தியுங்கள் தெரியும்- கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா பதில்
Published on

மேலும், இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டி வருகிறார். இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், ‘வாக்குப்பதிவு மெஷினில் முறைகேடு ஏதும் செய்ய இயலாது. முறைகேட்டை நிரூபிக்க முடியுமா?’ என்று சவால் விட்டுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற தேர்தலில் 272 வார்டில் 181-ல் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் தொடர்ந்து மூன்று முறை மாநகராட்சியை தங்கள் கைவசம் வைத்துள்ளது.

இந்நிலையில் கெஜ்ரிவாலில் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா கூறியதாவது:-

பா.ஜனதாவின் இந்த அமோக வெற்றிக்கு சிறந்த தேர்தல் யுக்தி மற்றும் வாக்காளர் மட்டுமே காரணம் என்று உறுதியாக கூற இயலாது. பூத் லெவலில் வேலை செய்யும் தொண்டர்களால் அந்த வெற்றியை தேடித்தர முடியும். வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து, வெற்றியை உறுதி செய்யும் வேலையில் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

வாக்கு இயந்திரத்தில் குளறுபடி செய்துதான் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது என்று கெஜ்ரிவால் கூறுகிறார். ஆனால், அந்த வெற்றியின் உண்மையான காரணம் அவருக்கு தெரிய வேண்டுமென்றால், அவர் கட்டாயம் எங்களுடைய பூத் லெவலில் வேலை செய்த தொண்டர்களை சந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com