ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து

ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு மம்தா பானர்ஜி வாழ்த்து
Published on

கொல்கத்தா:

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான ஹெப்டத்லான் விளையாட்டில் இந்தியா சார்பில் ஸ்வப்னா பர்மன், பூர்ணிமா ஹெம்பிராம் ஆகியோர் பங்கேற்றனர். 

100 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் ஆகிய 7 விளையாட்டுகளை உள்ளடக்கிய இப்போட்டியில், 7 விளையாட்டுகளிலும் சேர்த்து சிறப்பாக செயல்பட்டு அதிக புள்ளிகளை பெறுபவருக்கு தங்கப் பதக்கம் கிடைக்கும். 

அந்த வகையில் நேற்று பெண்களுக்கான ஹெப்டத்லானில் 4 பந்தயங்கள் முடிந்தன. இன்று காலை நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல் ஆகிய பந்தயங்கள் நடந்தது. 6 பந்தயங்கள் முடிவில் ஸ்வப்னா 5218 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் இருந்தார்.

இதற்கிடையே, பெண்களுக்கான ஹெப்டத்லான் போட்டியில் கடைசி பந்தயமான 800 மீட்டர் ஓட்டம் இன்று மாலை நடந்தது. இதில், ஸ்வப்னா 808 புள்ளிகள் பெற்றார். ஒட்டுமொத்தத்தில் 6026 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஸ்வப்னா தங்கப்பதக்கம் வென்றார்.

இந்நிலையில், ஆசிய விளையாட்டில் ஹெப்டத்லான் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறுகையில், ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா மற்றும் கொல்கத்தாவின் ஹெப்டத்லான் இளவரசியான ஸ்வப்னா பர்மனுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இதன்மூலம் நம் மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் என பதிவிட்டுள்ளார். #AsianGames2018 #SwapnaBarman #MamataBanerjee

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com