தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு- கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தூத்துக்குடி தொகுதியில் வெற்றி பெற்றதற்கு எதிராக தமிழிசை தொடர்ந்த வழக்கில் கனிமொழிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்
சென்னை ஐகோர்ட்
Published on

சென்னை: 

பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். இதை எதிர்த்து அத்தொகுதியில் தோல்வியை தழுவிய பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், குறைபாடான வேட்புமனுவை கனிமொழி தாக்கல் செய்ததாகவும், ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ரூ.2,000 பணம் வழங்கப்பட்டதாகவும் தமிழிசை குற்றச்சாட்டியிருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக தேர்தல் ஆணையம் 23-ந்தேதிக்குள் பதிலளிக்கவும், கனிமொழிக்கு நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com