

கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. அதன்படி, நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 69 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் 9 வயது சிறுமி, 46, 53, 41, 34 வயது பெண்கள், 49 வயது ஆண், 12 வயது சிறுவன், சீனிவாசா காலனி பகுதியில் 12 வயது சிறுவன், 48 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோல் முகமது லே அவுட் பகுதியில் 70 வயது மூதாட்டி, பெரியார் நகரில் 33 வயது பெண், 41 வயது ஆண், காந்தி நகர் பகுதியில் 56, 52, 62 வயது ஆண்கள், 53, 58 வயது பெண்கள், சேலம் சாலையில் 56, 19 வயது ஆண்கள், 53, 21, 14, 80 வயது பெண்கள், பழையபேட்டையில் 37 வயது ஆண், சத்ய சாய் நகரில் 41 வயது ஆண், டிபி ரோட்டில் 46 வயது ஆண், மோகன்ராவ் காலனியில் 69 வயது முதியவர், 60 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ., ஜக்கப்பன் நகர் 8-வது கிராசில் 51 வயது பெண், வீரப்பன் நகரில் 64, 25 வயது பெண்கள், திம்மராய கவுண்டர் தெருவில் 36 வயது ஆண், ராஜாஜி நகரில் 27 வயது ஆண், 33 வயது பெண், நேதாஜி ரோட்டில் 33 வயது ஆண், மேற்கு மாடத்தெருவில் 38 வயது ஆண், மாவட்ட பதிவாளர் அலுவலகம் அருகில் 28 வயது வாலிபர், பூந்தோட்டம் பகுதியில் 38 வயது ஆண், கே.ஆர்.பி அணை 43, 51 வயது ஆண்கள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
இதேபோல் பர்கூர், ஓசூர், குண்டலப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி, பர்கூர் சத்தலப்பள்ளி, பெரியமணவாரனப்பள்ளி, கொளதாசபுரம், ஓசூர் வெங்கடேஸ்வரா நகர், எழில் நகர், நெசவாளர் தெரு, ஜூஜூவாடி காமராஜ் நகர், பாகலூர் ரோடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழைய ஏஎஸ்டிசி அட்கோ, முனீஸ்வர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் என மாவட்டம் முழுவதும் 69 பேர் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் மொத்தம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.