பிரதமர் மோடி தாயாருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியின் தாயாரை சந்தித்துப் பேசினார்.
மோடி தாயாருடன் ஜனாதிபதி சந்திப்பு
மோடி தாயாருடன் ஜனாதிபதி சந்திப்பு
Published on

அகமதாபாத்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார். அங்கு அவரை முதல் மந்திரி விஜய் ரூபானி வரவேற்றார்.

இந்நிலையில், தனது சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று காந்தி நகர் சென்றார். அங்குள்ள ரைசான் கிராமத்தில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மோடியின் தாயாரை சந்தித்து பேசினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com