எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமையாக அமைந்திருந்தது என கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019
எம்எஸ் டோனியின் ஆட்டம் மிகவும் அருமை - விராட் கோலி பாராட்டு
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷான் மார்ஷின் அபாரமான சதத்தால் ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து ஆடிய இந்தியாவில் கேப்டன் விராட் கோலியின் பொறுப்புடன் ஆடினார். அவருக்கு எம்.எஸ்.டோனி ஒத்துழைப்பை தந்தார். கோலி ஒருநாள் போட்டிகளில் 39வது சதமடித்து அசத்தினார். இவர் 2 சிக்சர், 5 பவுண்டரிகள் உள்பட 104 ரன்களை எடுத்து அவுட்டானார். அவருக்கு பிறகு டோனி நிலைத்து நின்று அரை சதமடித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

இந்நிலையில், இந்தியாவின் வெற்றி குறித்து கேப்டன் விராட் கோலி கூறுகையில், எம்.எஸ்.டோனி மிகவும் அருமையாக விளையாடினார். அவர் என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். இன்றைய போட்டி எங்களுக்கு மிகவும் சிறப்பானது என பாராட்டு தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli #MSDhoni #HappyPongal2019

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com