திமுக உட்கட்சி பூசலால் அதிமுகவின் வெற்றி உறுதி- கருணாஸ் எம்.எல்.ஏ. பேட்டி

தி.மு.க.வில் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால், அ.தி.மு.க, மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது என கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
கருணாஸ் எம்.எல்.ஏ.
கருணாஸ் எம்.எல்.ஏ.
Published on

கமுதி:

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடைசி நாளில் மனுதாக்கல் செய்தனர். வேட்பாளர்களுடன், மாவட்ட செயலாளர் முனியசாமி, எம்.எல்.ஏ.க் கள் சதன்பிரபாகர், கருணாஸ் ஆகியோரும் வந்தனர்.

தமிழகத்தில் குடி மராமத்து திட்டத்தில் மழை காலம் தொடங்குவதற்கு முன்பே, கண்மாய்கள், குளங்கள், ஆறுகள், வரத்து கால்வாய்கள் குறித்த நேரத்தில் மராமத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் தேக்கப்பட்டு, இந்தாண்டு விவசாயம் செழிப்பாக உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தி.மு.க.வில், முன்னாள், இன்னாள் நிர்வாகிகளுக்குள் உட்கட்சி பூசல் அதிகரித்துள்ளதால், வெற்றி பெறும் வேட்பாளர்கள் பலர் ‘சீட்’ கிடைக்காமல் உள்ளனர். தி.மு.க.வில் உட்கட்சி பூசலால் அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்.

குறிப்பாக ராமநாதபுரம் தி.மு.க.வில் தான் உட்கட்சி பூசல் அதிகம். இதனால், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பலர், தற்போதே வெற்றி மகிழ்ச்சியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com