ஜெயலலிதா பிறந்த நாள்: ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த தின விழாவையொட்டி சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
Published on

சிவகாசி:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72-வது பிறந்தநாள்விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அ.தி.மு.க. வினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

சிவகாசி அருகே திருத்தங்கல்லில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நகர செயலாளர் பொன்சக்திவேல், ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், கூட்டுறவு சங்க தலைவர் ரமணா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

முன்னதாக ஜெயலலிதா படத்திற்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு திருத்தங்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் அ.தி.மு.க. மாவட்ட மருத்துவர் அணி, திருத்தங்கல் நகர் கழகம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் விஜய் ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ சேவையாற்றினர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com