11 நாட்களில் 10 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்... இந்தியாவில் கொரோனா மீட்பு எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா மீட்பு புள்ளிவிவரம்
கொரோனா மீட்பு புள்ளிவிவரம்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 60 லட்சத்தை கடந்துள்ளது. அதேசமயம் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி உயிரிழப்பு 1.58 சதவீதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 82.46 சதவீதமாகவும் இருந்தது. 

தினசரி நோய்த்தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் 10 லட்சம் பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலக அளவில் நோய்த்தொற்று எண்ணிக்கையில் அமெரிக்காவைத் தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com