தங்கம் விலை 4 நாட்களில் ரூ.344 குறைந்தது

சென்னையில் கடந்த 4 நாட்களாக ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 குறைந்து, இன்று ஒரு சவரன் ரூ.23,072-க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை 4 நாட்களில் ரூ.344 குறைந்தது
Published on

சென்னை:

தங்கம் விலை கடந்த 9-ந்தேதி ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 416 ஆக இருந்தது. தொடர்ந்து விலை படிப்படியாக குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ.60 குறைந்து ரூ.23 ஆயிரத்து 128 ஆக இருந்தது.

இன்று பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 72 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ2,884-க்கு விற்கிறது.

கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.344 குறைந்துள்ளது. விலை குறைந்து வருவது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை விலை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ருபாயின் மதிப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பங்கு சந்தையில் முதலீடு அதிகரிப்பும் தங்கம் விலை குறைய காரணம் என கூறப்படுகிறது.

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ 42 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.42.40-க்கு விற்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com