எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி மலர் அஞ்சலி

சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். தலைமையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் 24-ந்தேதி மலர் அஞ்சலி
Published on

சென்னை:

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 30-வது ஆண்டு நினைவு நாள் வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.

அன்று காலை 8 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- மந்திரியுமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வக்கீல்கள் பிரிவு உள்பட அனைத்து பிரிவை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com