விபத்தில் இறந்த 2 பேர் குடும்பங்களுக்கு நிதி உதவி - பழனிசாமி, பன்னீர்செல்வம் அறிவிப்பு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் இறந்ததால் அதிமுக சார்பில் 2 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தனர்.
விபத்தில் இறந்த 2 பேர் குடும்பங்களுக்கு நிதி உதவி - பழனிசாமி, பன்னீர்செல்வம் அறிவிப்பு
Published on

சென்னை:

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், ஒரத்தநாடு தெற்கு ஒன்றியம், ஆம்பலாப்பட்டு தெற்குத் தெரு கிளைக் கழகப் பொருளாளர் சுந்தர பாண்டியன், மதுக்கூர் பேரூராட்சியைச் சேர்ந்த கழக உடன்பிறப்பு சேகர் ஆகியோர், நேற்று சென்னையில் நடைபெற்ற, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பும் போது ஏற்பட்ட சாலை விபத்துக்களில் தங்கள் இன்னுயிரை இழந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றோம்.

அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். அ.தி.மு.க. சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com