சினிமா தியேட்டரில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரும் விளம்பரம் நிறுத்தம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பூஜை செய்வதாக சினிமா தியேட்டரில் வரும் அரசு விளம்பரத்தை நீக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார்.#Edappadipalanisamy #jayakumar
சினிமா தியேட்டரில் எடப்பாடி பழனிசாமி பெயரில் வரும் விளம்பரம் நிறுத்தம்
Published on

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பூஜை செய்வதாக சினிமா தியேட்டரில் அரசு விளம்பரம் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளி வந்தன. அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்தனர். இது குறித்து அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் இன்று நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த விளம்பரம் குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசியதை தொடர்ந்து அவர் அந்த விளம்பரத்தை நீக்க உத்தரவிட்டுள்ளார். அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டுள்ளதால் இனிமேல் தியேட்டரில் வராது.

X

Maalai Malar
www.maalaimalar.com