அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்
Published on

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நாளை மாலை 5 மணிக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

நடைபெற உள்ளது.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த  கூட்டத்தில் அனைத்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கொறடா சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், நாளை தொடங்கவுள்ள தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

X

Maalai Malar
www.maalaimalar.com