கடந்த ஓராண்டில் 4 எம்.எல்.ஏ.க்களை இழந்தது திமுக- சட்டசபையில் கட்சியின் பலம் 97 ஆக குறைவு

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதையடுத்து தமிழக சட்டசபையில் அக்கட்சியின் பலம் 97 ஆக குறைந்துள்ளது.
திமுக தலைமையகம்
திமுக தலைமையகம்
Published on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் கண்ணம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

கடந்த ஓராண்டில் மட்டும் 4 எம்.எல்.ஏ.க்களை இழந்திருக்கிறது திமுக. விக்கிரவாண்டி- ராதாமணி, குடியாத்தம்- காத்தவராயன், திருவொற்றியூர்- கே.பி.பி.சாமி ஆகியோரைத் தொடர்ந்து இன்று சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி ஜெ.அன்பழகன் காலமாகி உள்ளார்.

ஜெ.அன்பழகன் மறைவால் தமிழக சட்டசபையில் திமுகவின் பலம் 98ல் இருந்து 97 ஆக குறைந்துள்ளது. அத்துடன் தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக உயர்ந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com