ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க. உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்

இன்று மாலை வெளியான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி டி.டி.வி. தினகரன் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் தி.மு.க. உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க. உட்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்
Published on

சென்னை:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இறுதி முடிவுகளின்படி குக்கர் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி. தினகரன் 89,013 வாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் பதிவான வாக்குகளில் 50.32 சதவீதம் வாக்குகளை இவர் பெற்றுள்ளார்.

தினகரனுக்கு அடுத்தபடியாகவந்த அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் 48,306 (27.31%) வாக்குகளை வாங்கியுள்ளார். 24,651 (13%) வாக்குகளை பெற்ற மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3802 வாக்குகளையும், பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் 1368 வாக்குகளையும் பெற்றனர்.

நோட்டாவுக்கு 2348 வாக்குகள் விழுந்துள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க. மட்டுமே இந்த இடைத்தேர்தலில் டெபாசிட் தொகையை தக்கவைத்துள்ளது. தி.மு.க. உள்ளிட்ட 57 வேட்பாளர்களுமே டெபாசிட் தொகையை இழந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com