திமுக பொதுச்செயலாளர் க அன்பழகன் காலமானார்

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க அன்பழகன் உடல்நிலை குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
க அன்பழகன்
க அன்பழகன்
Published on

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். வயது முதிர்வு காரணமாக கடந்த ஒரு வருடமாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடல்நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், அவரது உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. . இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

முன்னதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக்கு சென்று, அன்பழகனின் உடல்நிலை குறித்து டாக்டர்களிடம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பொதுச்செயலாளர் க.அன்பழகனுக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வயது முதிர்வால் டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை பயனளிக்க முடியாத நிலையில் உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலமானார்.

X

Maalai Malar
www.maalaimalar.com