16வது மெகா தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20,934 பேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Published on

சென்னை:

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தமிழகம் முழுவதும் இன்று 16-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையடுத்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

ஜனவரி 3-ம் தேதி போரூர் பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்.

இன்று நடந்த 16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதில் 5,17,126 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12,14,151 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 85.76, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 57.94, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 92 லட்சமாகும்.

கொரோனாவால் இறந்த 375 முன்கள பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 93 கோடியே 15 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளன என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com