தொப்பென்று விழுந்த தோப்பு...

கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார். தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தார்.
தொப்பென்று விழுந்த தோப்பு...
Published on

கொங்கு மண்டலத்தில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் எல்லோருக்கும் அறிமுகமானவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் ஐக்கியமானவர். தற்போது கட்சியில் இருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைப்பதற்கான வேலைகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அந்த வகையில் ஒரு காலத்தில் பவர்புல் அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலம், எடப்பாடி பழனிசாமியின் உறுப்பினரான கே.சி.கருப்பண்ணனுக்கு முக்கியத்துவம் வந்ததும் டம்மியானார்.

இந்த நிலையில்தான் கடந்த தேர்தலில் தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு கொடுக்காததால் அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து களம் இறங்கினார். ஆனாலும் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தி.மு.க. பக்கம் சென்றார். ஆனால் தி.மு.க.விலும் எதிர்பார்த்தபடி பொறுப்புகள் எதுவும் கிடைக்காததால் ஒதுங்கியே இருந்தவர் இப்போது மீண்டும் எடப்பாடி முன்பு தொப்பென்று விழுந்துள்ளாராம். சேலத்தில் தங்கி இருந்த எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய விருப்பம் தெரிவித்து இருப்பதாக கொங்கு மண்டலத்தில் பேச்சு பலமாக அடிபடுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com